×

மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

மும்பை : மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராமாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதே சமயம் மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இதையடுத்து மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.


Tags : Devendra Fadnavis ,governor ,Maratha ,Maharashtra ,Bhagat Singh Koshyari , Maharashtra, Devendra Fadnavis, Governor, Bhagat Singh Koshyari resigns
× RELATED கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கவர்னர் பன்வாரிலால் குணமடைந்தார்