×

பெரம்பலூரில் அருங்காட்சியகம் அமைத்து பொக்கிஷம், கடல்வாழ் உயிரின படிமங்கள் பாதுகாக்கப்படுமா?

*சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்


பெரம்பலூர் : கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள், நூற்றாண்டுப் பழமைவாய்ந்த காசுகள், அணிகலன்கள் அழிந்து போகும் முன்பாக அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் வேண் டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தின் மையத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, அயனாவரம், கொளக்காநத்தம், சாத்தனூர், கொளத்தூர் பகுதிகளில் இருந்து அரியலூர் மாவட்டத்தின் சிலபகுதிகள் வரை 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை கட லாகவே இருந்துள்ளது. குறிப்பாக காரை அருகே கடலாக இருந்த 1400 ஏக்கர் பரப்பளவில், கடலின் தரைப் பகுதி இன்றளவும் அப்படியே உள்ளது. இங்கு கடல்வாழ் உயிரினங்களின் பாசில்கள் எனப்படும் படிமங்களான நத்தைகள், கிளிஞ்சல்கள், சங்குகள் பெருமளவு கண்டெடுக்கப் பட்டுள்ளன.

அருகிலுள்ள சாத்தனூர் கிராமத்தில் 18மீட்டர் நீளத்திற்கு கண்டறியப் பட்டு ள்ள, 12 கோடி ஆண்டுகளு க்கு முந்தைய ஜுராசிக் யுக த்தில், சைவ ரக டைனோ சர்கள் வாழ்ந்த காலத்திலி ருந்த, பூக்காத தாவர வகை யைச் சேர்ந்த மரம் ஒன்று கடல் ஆட்கொண்டதால் புதையுண்டு கல்லாகிப் போன, உலகின் மிகப்பெ ரிய கல்மரப் படிமம் இங்கு ள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டத்தில் கண்டெடுக் கப் பட்ட ஒன்றரைமீட்டர் நீளமுள்ள கல்லாகிப்போ ன மரத்துண்டுகளும் காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களிட மிருந்து கம்பிவேலி அமை த்துப் பாதுகாக்கப் படுகிற தே தவிர வெயிலுக்கும், மழைக்கும் வீணாகாமல் பாதுக்காக்கப்படவில்லை.

அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 16ம் நூற்றா ண்டின் இறுதியில் கட்டப்ப ட்டு 17ம்நூற்றாண்டில் ஆங் கிலேய கூட்டுப் படைக்கும், பிரெஞ்சு கூட்டுப் படைக் கும் நடந்த, வால்கொண்டா போருக்கான மையப்பகுதியாக திகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட ஆங்கிலேயர், பிரெ ஞ்சுக்காரர்கள், முகமது அலி, சந்தாசாஹிப், திப்புசுல் தான் காலத்து காசுகள், பீரங்கிகளில் பயன்படுத் திய கற்குண்டுகள், அந்தக் கொட்டையில் தொல்லியல் துறையின்கீழ் 18ஆண்டு பணிபுரிந்து ஓய்வுபெற்ற கோட்டைக் காவலாளி காசிம் என்பவரிடம் உள் ளது.

அதனை ஒப்படைக்க முன்வந்தும் சம்மந்தப்பட்ட துறையோ, கலெக்டர்களோ பெற்றுக்கொள்ளாததால் அவரிடமே உள்ளது. அதே போல் பெரம்பலூர் நகராட்சி அரணாரையில் அரிசி ஆலை வைத்திருக்கும் தொழிலதிபர் மாணிக்கம் என்பவரிடம் பழங்கால காசுகள், வெளிநாட்டு ரூபா ய் நோட்டுகள், நூற்றாண் டுப் பழமை வாய்ந்த தோடு, தண்டட்டி, லாந்தர்விளக்கு, வால், கத்தி போன்ற அரிய பொருட்கள் உள்ளன. மேலும் மாவட்டத்தில் பாளையம், சத்திரமனை கிராமங்களில் காணப்படு ம் கல்செக்குகள், நொச்சி யம், புதுநடுவலூர், செல்லி யம்பாளையம் பகுதிகளில் காணப்படும் முன்னோரை உயிரோடு புதைத்த முது மக்கள் தாழிகள் போன்ற வற்றை மீட்டெடுத்து வருங் கால சந்ததிகள் மாவட்டத் தின் மகத்துவத்தை, புவி யியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக காணப்படும் கால த்தால் கழியாத பொக்கி ஷங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவற்றை அர சின்மூலம் அழியாமல் பாதுக்காக்க அருங்காட்சிய கம் அமைத்திட வேண்டிய தேவை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் காரை பகுதிக்கு வந்து கடலாக இருந்த பகு தியை இந்தியப் புவியியல் துறையின் டெபுட்டி டைரக் டர் ஜென்ரல் ராஜூ, இந் திய புவியியல் துறை (பூங் கா & அருங்காட்சியகம்) டைரக்டர் நாகேந்திரன், புவியியல்துறை மூத்த வல் லுநர்கள் இசக்கிமுத்து, கேரளா ஜீனா, மேற்கு வங் கம் பம்பிராய் அடங்கிய குழுவினர் நவ16,17 நேரில் ஆய்வுசெய்தபிறகு புவியி யல்துறை டெபுட்டி டைரக் டர் ஜென்ரல் ராஜூ தெரிவி க்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தப் பகுதிக ளில் கடல்வாழ் உயிரி னங்களின் படிமங்கள் கண க்கற்று உள்ளன. இந்தியப் புவியியல்துறை சார்பாக காரை & கொளக்காநத்தம் பகுதியைமேம்படுத்த கலெ க்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இந்தியப் புவியியல் துறை 2015ம் ஆண்டே காரைபகுதியை புவியியல் தொன்மை வாய்ந்த பகுதியாக அறி வித்து விட்டது. பெரம்பலூர் மாவட்டநிர்வாகம் புராதான பகுதியை பாதுகாத்திட எந் தப் பணிகளை மேற்கொ ண்டாலும் அதற்கு இந்திய ப் புவியியல் துறை தடைவி திக்காது.பூமியின் ஆரம்ப கால மீசாசோயிக் யுகத்தில் கிரெடேசியஸ் காலத்திலி ருந்த பூக்காத தாவரவகை மரம்தான் சாத்தனூர் கிரா மத்தில் கல்மரமாகக் கண் டெடுக்கப்பட்டது. இம்மரம் பலரால் ஆராய்ச்சி, அதிச யம் என்ற பெயரில் சுரண்ட ப்பட்டு தற்போது குறைந்து விட்டது.

இதனால்தான் கடந்த ஆண்டு கம்பிவேலி போடப்பட்டது. மேலும் மழை,வெயில் பாதிப்பி ன்றி மேற்கூரை, திருடு போகாதிருக்க கண்ணாடி பாதுகாப்பு ஏற்பாடு செய்ய ப்படவுள்ளது. கரம்பியம் பகுதியில் அமோனைட் எனப்படும் கடல்நத்தை யின் மிகப்பெரிய படி மங் கள் காணப்படுகிறது. அங்கு 3ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு எல்லை வரைய றுக்கவேண்டும். காரை பகு தியில் புவியியல்துறை நவீன அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது எனத் தெரிவி த்து விட்டுச் சென்றார். ஆனால் அதுகிடப்பில் போடப்பட்ட கல்லாகக் கிடக் கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் புவியியல் ரீதியாக, வரலா ற்று ரீதியாக காண்டெடுக் கப்பட்டுள்ள பழமையின் எச்சங்கள், சரித்திரத்தின் மிச்சங்கள் அனைத்தும் அடுத்த தலைமுறை அறிந் து கொள்ள அரசால் பாது காக்க அரசு அரசு அருங்கா ட்சியகம் காரையிலோ, பெரம்பலூரிலோ அமைக் கப்பட வேண்டும் என பல தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : museum ,Perambalur Museum Will perambalur , perambalur ,marine life ,fossils ,perambalur Museum
× RELATED ஸ்ரீவாரி அருங்காட்சியகம்