×

மூணாறில் தேசிய பூங்காவில் நுழைந்த கொம்பன்

* சுற்றுலாப்பயணிகள், வியாபாரிகள் ஓட்டம்

மூணாறு, : மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமான இரவிகுளம் தேசிய பூங்காவில் நுழைந்த கொம்பன் யானையைக் கண்ட சுற்றுலாப்பயணிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளது. இங்கு காஷ்மீருக்கு அடுத்தப்படியாக அரியவகையான வரையாடுகள் உள்ளன. இவற்றைக் கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இரவிகுளம் தேசிய பூங்கா வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வரையாடுகளை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் நுழைவுசீட்டு எடுப்பதற்காக சுமார் 500க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது நுழைவுசீட்டு வழங்கும் இடத்தில் இருந்து 50மீட்டர் தூரத்தில் உள்ள காட்டில் இருந்து திடீரென்று கொம்பன் யானை இறங்கியது. நுழைவு சீட்டு வழங்கும் இடத்தின் அருகில் யானையைக் கண்ட சுற்றுலாப்பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மேலும் சாலையோரத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகளும் ஓட்டம் பிடித்தனர்.

அப்பகுதி வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த காரட், மாங்காய் போன்றவற்றை ஆர்வத்துடன் யானை சாப்பிட்டது. இதன் பின் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த மினிபஸ் முன் ஒரு மணிநேரம் நின்றது. இந்த காட்சியை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் கொம்பன் யானை மெதுவாக நடந்து காட்டுக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Munnar National Park ,Tourist ,Merchants Ran ,Munnar National Park Forest Elephant , Munnar ,National Park ,Forest Elephant , Komban
× RELATED தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல தடை