×

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது : ரஜினிகாந்திற்கு துரைமுருகன் பதில்

சென்னை : வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்; தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று கூறிய ரஜினிகாந்திற்கு துரைமுருகன் இவ்வாறு பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது என்று தெரிவித்த அவர், தமிழகத்தின் தட்ப வெப்ப அரசியல் குறித்து நடிகர் ரஜினிகாந்திற்கு தெரியவில்லை என்றும் ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்றும் குறிப்பிட்டார்.


Tags : Stalin ,Tamil Nadu , DMK, Treasurer, Duraimurugan, Stalin, Rajini
× RELATED தமிழகம் பலதுறைகளில் தோல்வியடைந்ததையே...