×

சபரிமலை சீசன் எதிரொலி கேரளாவுக்கு சேலம் வழியே 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்

*ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சேலம் : சபரிமலை சீசன் எதிரொலியாக சேலம் வழியே கேரளாவுக்கு 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி, நாடு முழுவதும் இருந்து கேரளாவிற்கு பக்தர்கள் அதிகளவு செல்கின்றனர். இதனால், ரயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து, இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இருமார்க்கத்திலும் கூட்டநெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.

இதன்படி, கொல்லம்-காக்கிநாடா டவுன் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (07212), வரும் 17, 21, 25ம் தேதியில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காயங்குளம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, குண்டூர், விஜயவாடா வழியே காக்கிநாடா டவுனுக்கு அடுத்தநாள் மதியம் 2.50 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், கொல்லம்-ஐதராபாத் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (07110), வரும் 23, 27, டிசம்பர் 1ம் தேதியில் இயக்கப்படுகிறது.

கொல்லத்தில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே ஐதராபாத்திற்கு அடுத்தநாள் காலை 10.45 மணிக்கு சென்றடைகிறது. கொல்லம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06062), வரும் 16, 23, 30ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மதியம் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சென்னை சென்ட்ரலை அடுத்தநாள் காலை 9.50 மணிக்கு சென்றடைகிறது.சென்னை சென்ட்ரல்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06063), வரும் 17, 24ம் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. இந்த ரயில், சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு வழியே கொல்லத்திற்கு அடுத்தநாள் காலை 10.10 மணிக்கு சென்றடைகிறது. கொல்லம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06064), வரும் 18, 25ம் தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலை அடுத்தநாள் காலை 7.20 மணிக்கு சென்றடைகிறது.

சென்னை சென்ட்ரல்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06065) வரும் 16, 23, 30ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. சென்னையில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லத்திற்கு அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு சென்றடைகிறது. சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06047), வரும் 21, 28ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. திருவனந்தபுரத்திற்கு அடுத்தநாள் முற்பகல் 11.45 மணிக்கு சென்றடைகிறது.

திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06048) வரும் 20, 27ம் தேதிகளில், மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது. கோவை-சந்திரகாஞ்ச் சுவிதா சிறப்பு ரயில் (80824), இன்று (8ம் தேதி) இரவு 9.45 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர், பலாசா வழியே சந்திரகாஞ்ச்க்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Tags : Sabarimala ,season ,Salem For Sabarimala ,Kerala ,Special Trains Announced Via Salem: Southern Railway , Southern railway,Sabarimala ,Special trains, special fare trains
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...