×

மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவு

திண்டுக்கல்  : திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடமுதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு  9.11.2019 முதல் 90 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட முதல்வர் பழனிசாமி  ஆணையிட்டுள்ளார். இதனால் 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்ட முதல்வர், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்வதாக உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார்.Tags : Palanisamy ,Marudhanadi Dam , Dindigul, Marudanathi Dam, CM Palanisamy, Water and Irrigation
× RELATED 'சிறு துளி பெரு வெள்ளம்'என்பதற்கேற்ப...