×

‘புல் புல்’ புயல் எதிரொலி மீனவர்கள் கரைக்கு திரும்ப மீன்வளத்துறை வலியுறுத்தல்

தண்டையார்பேட்டை: ‘புல் புல்’ புயல் காரணாமாக மீனவர்கள்  உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட மீனவர்கள் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டினம் புவனேஸ்வர் இடையே ‘புல்புல்’ புயல்  ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை  மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக மீன் பிடித்து கரைக்கு திரும்ப  வேண்டும் என்றும் சென்னை காசிமேட்டில் உள்ள மீன்பிடி உதவி இயக்குனர்  அலுவலகத்தில் இருந்து வாக்கி டாக்கி மூலம் மீனவர்களுக்கு தகவல் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் உறவினர்கள் பதற்றத்துடன் உள்ளனர். கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிள்ளது.



Tags : storm ,Bull Bull' Storm Echoes Fisheries Department ,Fishermen , Storm grass , Fishermen , Fisheries
× RELATED பிரதமர் மோடி இன்று ரீமால் புயல்...