×

இந்திய சீக்கியர்கள் கர்தார்ப்பூர் வருவதற்கு பாஸ்போர்ட் அவசியம்: பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: இந்திய சீக்கியர்கள் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு வருவதற்கு பாஸ்போர்ட் அவசியம் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும் பாகிஸ்தானின் கர்தார்ப்பூர் குருத்வாராவிற்கும் இடையே  கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான்  கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார். ‘‘கர்தார்பூர் குருத்வாராவிற்கு வரும் இந்திய சீக்கியர்களுக்கு மதிப்புமிக்க அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதுமானது, பாஸ்போர்ட் தேவையில்லை’’  என கடந்த 1ம் தேதி பிரதமர் இம்ரான் கான் அறிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு நேற்று முன்தினம் இதுகுறித்து பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்திய சீக்கியர்கள் கர்தார்பூர் குருத்வாராவை பார்வையிடுவதற்கு பாஸ்போர்ட் தேவையா இல்லையா என்பது குறித்து தெளிவாக  விளக்கும்படி பாகிஸ்தான் அரசிடம்  கேட்டிருந்தது. இந்நிலையில், கர்தார்பூர் குருத்வாராவிற்கு வரும் இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி  ஒன்றில், “கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்துவதற்கு இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியமாகும். இதில் பாதுகாப்புக்கான இணைப்பு இருக்கிறது. எனவே பாஸ்போர்ட் அடையாளத்தின் கீழ் அனுமதி வழங்கினால் அது சட்டப்பூர்வமாக  நுழைவதாக இருக்கும். பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது’’ என்றார்.

Tags : Sikhs ,Pakistan Army ,Indian , Passport , essential , Indian Sikhs ,Pakistan Army
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்