×

ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது

சென்னை: ரஜினியின் தர்பார் பட மோஷன் போஸ்டர் நேற்று வௌியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.  நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் மகேஷ்பாபு, மலையாளத்தில் மோகன்லால் இந்த மோஷன் போஸ்டர்களை வெளியிட்டனர். போலீஸ் கெட்அப்பில் ஆக்‌ஷன் காட்சியில் ரஜினி தோன்றுவது போல் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அனிருத்தின் பின்னணி இசையுடன் வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


Tags : Rajni , Rajini, Dhabar , Motion Poster
× RELATED அவர் பெயர்தான் ரஜ்னி விமர்சனம்