×

4 லட்சம் மின்சாரம் பயன்படுத்திவிட்டு மாதம் 425 கட்டணம் செலுத்திய உத்தரகாண்ட் மின்வாரிய மேலாளர்: ஐகோர்ட் ‘குட்டு’

நைனிடால்: 4 லட்சம் மதிப்பு மின்சாரத்தை பயன்படுத்திவிட்டு மாதம் 425 மட்டும் மின் கட்டணம் செலுத்தி வந்த உத்தரகாண்ட் மின்வாரிய பொது மேலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உத்தரகாண்ட் மின்  கார்பரேஷன் லிமிடெட்(யுபிசிஎல்) பொது மேலாளராக இருப்பவர் சி.கே.தம்தா. இவர் கடந்த 25 மாதங்களில் தனது வீட்டு உபயோகத்துக்காக 92 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளார் இதற்கான கட்டணம் 4 லட்சம். ஆனால் இவர்  மாதம் 425 மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளார். இது குறித்து ஒருவர் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். பொது மேலாளர் மட்டும் அல்லாமல், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களும் அவர்களது  குடும்பத்தினரும் மின்சார சலுகையை ஓய்வுக்குப்பின்பும் அனுபவிக்கின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் தலைமையிலான அமர்வு தனது அதிருப்தியை தெரிவித்தது. மின்வாரிய அதிகாரிகள், மின்சார பயன்பாட்டு விவரங்களை வேண்டும் என்றே குழப்பும்  முயற்சி இது என குறிப்பிட்ட நீதிபதிகள், அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகமத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். யுபிசிஎல் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகயைில், ‘‘பொது மேலாளர் வீட்டில் கடந்த 2005ம் ஆண்டு மின் மீட்டர்  பொருத்தப்பட்டது. ஆனால் 2015ம் ஆண்டிலிருந்துதான் மின்பயனீட்டு அளவுகள் பராமரிக்கப்பட்டன’’ என தெரிவித்தார். ஊழியர்களுக்கு கணக்கில்லாத அளவுக்கு இலவச மின்சாரம் வழங்க யுபிசில் ஏற்றுக் கொண்ட செலவு உட்பட அனைத்து  ஆவணங்களை சிஏஜி ஆடிட் செய்ய உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் முதலில் விரும்பினர். பின்னர் உண்மை விவரங்களை ஒருவாரத்துக்குள் பதிலாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டதாக யுபிசிஎல் சார்பில் ஆஜரான வக்கீல்  தெரிவித்தார்.

Tags : Uttarakhand Electricity Manager ,kutu , 4 Lakhs Electricity, Uttarakhand, Electricity Manager, iCord
× RELATED துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் பயங்கர காட்டுத்தீ