தங்களுக்காக வேலை செய்யும் ஆட்சியாளர்கள்: பிரியங்கா டிவீட்

புதுடெல்லி:  “நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் தங்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள்” என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து வருகின்றது.  இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவ்வப்போது விமர்சனம் செய்து வருகின்றார். நேற்று அவர் தனது டிவிட்டர் பதிவில், “நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. சேவை துறையானது வீழ்ச்சி  அடைந்துள்ளது. வேலைவாய்ப்பு குறைந்து வருகின்றது. ஆனால் ஆட்சியாளர்கள் தங்களுக்காக மட்டுமே பரபரப்பாக இயங்கி வருகின்றனர். மக்கள் ஒவ்வொரு நிலையிலும் துன்பப்பட்டு வருகின்றனர். உங்களது ஆட்சிக் காலத்தில் யார் பயன்  அடைந்தார்கள் என ஒவ்வொருவரும் பாஜ அரசை கேள்வி கேட்க வேண்டும். பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஆனால் அமெரிக்கா அங்கு வேலை செய்ய விரும்பும் இந்தியர்களின் எச்பி1  விசாக்களின் எண்ணிக்கையை நிராகரிக்கும் அளவை அதிகரித்து வருகின்றது” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: