×

அரையாண்டு தேர்வு அட்டவணை: பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 11ம் தேதி தொடங்குகின்றன. இதற்கான அட் டவணையை பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான ேதர்வுகள் டிசம்பர் 11ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு டிசம்பர் 13ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிகிறது. இவற்றில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நடக்கிறது.

பத்தாம் வகுப்பு அட்டவணை
தேதி    பாடம்
டிச.13    மொழிப்பாடம்
 ,, 16    ஆங்கிலம்
 ,, 17    விருப்ப மொழிப்பாடம்
 ,, 18    கணக்கு
 ,, 20    அறிவியல்
 ,, 23    சமூக அறிவியல்

பிளஸ் 1 அட்டவணை
தேதி    பாடம்
டிச.11    மொழிப்பாடம்
,,  12    ஆங்கிலம்
,,  14    இயற்பியல், பொருளியல், கணினி தொழில் நுட்பம்
,,  16    கணக்கு, விலங்கியல், வணிக வியல், நுண்ணுயிரியல், மற்றும் தொழில் பாடங்கள்
,,   18    வேதியியில், கணக்குப்பதிவியல், புவியியல்
,,   20    தொடர்பு ஆங்கிலம், இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல்,மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
,,   23    உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழில் பாடங்கள்

பிளஸ் 2 அட்டவணை
தேதி    பாடம்
டிச.11    மொழிப்பாடம்
,, 12    ஆங்கிலம்
,, 14    கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் மற்றும் தொழில்பாடங்கள்
,, 16    இயற்பியல், பொருளியல், கணினி தொழில் நுட்பம்
,, 18    தொடர்பு  ஆங்கிலம், இந்திய பண்பாடு, கணினி அறிவியல் உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், அரசியல்அறிவியல்
,, 20    வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்,
,, 23    உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல், தொழில் பாடங்கள்


Tags : Half Yearly Examination Schedule, School Education Department
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...