×

புல்புல் புயல் மேற்கு வங்கத்துக்கு நகர்ந்து செல்கிறது

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு  இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு புல்புல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து செல்கிறது. அதனால் மத்திய கிழக்கு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக உருவான காற்றழுத்தம், வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது. அது நேற்று மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘புல்புல்3 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாக மாறும். பின்னர் அந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறண்ட வானிலை காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அ டுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


Tags : Bulbul Storm ,West Bengal ,Storm , Bulbul Storm, West Bengal
× RELATED மம்தா பானர்ஜியுடன் மோதல் மேற்கு வங்க அமைச்சர் திடீர் ராஜினாமா