×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்கத்துறை சூப்பிரண்டுக்கு 2 ஆண்டு சிறை : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னை, சுங்கத்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் கே.பாஸ்கர். இவர் கடந்த 1.1.2004 முதல் 26.11.2009ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்தில் 1 கோடியே  3 லட்சத்து 78 ஆயிரத்து 789 மதிப்பில் சொத்துகளை தன் பெயரிலும், தனது மனைவி பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கண்காணிப்பாளர் பாஸ்கர், அவரது மனைவி அனிதா ஆகியோர் முறைகேடாக சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் சென்னையில் உள்ள 9வது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு தரப்பு சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது, இந்த வழக்கில் பாஸ்கர், அவரது மனைவி அனிதா ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாஸ்கருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், மனைவி அனிதாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் ₹1.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த 79 லட்சத்து 96 ஆயிரத்து 816 மதிப்புள்ள சொத்துகளை அரசு கையகப்படுத்த உத்தரவிட்டார்.

Tags : Customers ,CBI ,jail ,Customs Superintendent ,Superintendent , Superintendent of Customs ,property, income exceeded 2 years
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...