×

போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வு உயரத்தை அதிகரிக்க காலில் அட்டை ஒட்டி வந்த வாலிபர் : தகுதிநீக்கம் செய்து வெளியேற்றம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த போலீஸ் வேலைக்கான உடல் தகுதித் தேர்வில்  உயரத்தை கூட்டிகாட்ட காலில்பேஸ்ட் தடவி அட்டையை ஒட்டிக்கொண்டு வந்த வாலிபரை தகுதி நீக்கம்  செய்து மைதானத்திலிருந்து வெளியேற்றினர். தமிழ்நாடு சீருடைப்  பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில்  2ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதித்தேர்வு மற்றும்  உடல்திறன் தேர்வு நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.
இதில் விழுப்புரம்,  கடலூர் மாவட்டங்களில் தேர்வானவர்களுக்கு உடல்தகுதித்தேர்வு  விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று 2வது  நாளாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 900 இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு  மார்பளவு, உயரம், 1,500மீட்டர் ஓட்டம் ஆகியவை நடந்தது. இத்தேர்வுகளை  தலைமையிட ஐஜி செந்தாமரைக்கண்ணன், டிஐஜி சந்தோஷ்குமார், எஸ்பி ஜெயக்குமார்  ஆகியோர்  ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.

இதனிடையே வாலிபர் ஒருவருக்கு உயரம் அளவீடு செய்து கொண்டிருந்தனர். அப்போது குதிகால்பகுதியில் அதிகளவு  மண் ஒட்டியிருந்ததால் கீழே இறக்கப்பட்டு வாலிபரின் குதிகாலை பார்த்தனர்.  அப்போது உயரத்தை கூட்டி காட்டுவதற்காக பேஸ்ட்தடவி அதன்மேல் காகித அட்டைகளை  ஒட்டி வந்தது தெரியவந்தது. விசாரணையில் கெங்கராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த  அந்த வாலிபருக்கு 168 செ.மீ உயரம் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 3  செ.மீ உயரம் குறைவாக இருப்பதால் உயரத்தை கூட்டி காட்டுவதற்காக காலில்பேஸ்ட்  தடவி, அட்டை ஒட்டி வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக எஸ்பி ஜெயக்குமார் அவரிடம் விசாரணை நடத்தி தகுதி நீக்கம் செய்து  மைதானத்திலிருந்து வெளியேற்றினார்.

Tags : Plaintiff , increase height,eligibility for police work,Disqualified
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...