×

நெற்பயிரில் புழு தாக்குதல்: விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் பெரியகுளம் வட்டார வேளாண்மை துறை சார்பில் நெற்பயிர்களில் புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சென்றாயன், வேளாண்மை அலுவலர் பாண்டியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் குணசேகரன், ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு  புழு தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து செயல்விளக்க ஆலோசனை மற்றும் பயிற்சி அளித்தனர்.

மேலும் விவசாய நிலங்களில் நெற்பயிர்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு தகவல்கள் மற்றும் விளக்கங்களை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் பாண்டியன், லட்சுமணன், முத்தையா, சீனிவாசன், சிவக்குமார் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Paddy worm attack ,Government , Paddy, worm attack, farmer, authorities, counsel
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...