×

கர்தார்பூர் சாலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் செல்வதற்கு சித்துவுக்கு மத்திய அரசு அனுமதி

கர்தார்பூர்: கர்தார்பூர் சாலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, பாக். செல்வதற்கு, சித்துவுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குருநானக்கின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானில், சர்வதேச எல்லையை ஒட்டி, ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை, சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். கர்தார்பூர் பாதை திறப்பு விழா நவ.,9ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, பாகிஸ்தான் செல்ல அனுமதிக்க வேண்டும் என, வெளியுறவு அமைச்சகத்துக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்., கட்சியை சேர்ந்தவருமான, நவ்ஜோத் சிங் சித்து அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : Sidhu ,road ,Pakistan ,road opening ,Kidarpur , Kardarpur Road, Opening Ceremony, Pakistan, Sidhu, Central Government, Permit
× RELATED சேதமடைந்த அருப்புக்கோட்டை ரோடு