×

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் விருப்பமில்லை, இண்டிகோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே விருப்பம்: கத்தார் ஏர்வேஸ்

மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் விருப்பமில்லை என கத்தார் ஏர்வேஸ் தெரிவித்திருக்கிறது. இண்டிகோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே விருப்பம் உள்ளதாகவும், அதற்கு உகந்த தருணம் இதுவல்ல என்றும் கூறியிருக்கிறது. டெல்லி வந்திருந்த கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி அக்பர் அல் பாக்கர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். பணபலம் படைத்த முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்தால், ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க, மிகுந்த ஆர்வத்துடன் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒருவேளை டாடா நிறுவனம் தங்களுடன் இணைந்து வந்திருந்தால், ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க ஆர்வம் இருந்திருக்கும் என்றும், ஆனால் ஏற்கனவே டாடாவிடம் விஸ்தாரா உள்ளதால், அதற்கான சூழல் உருவாகவில்லை, என்றும் கத்தார் ஏர்வேஸ் CEO அக்பர் அல் பாக்கர் தெரிவித்திருக்கிறார். டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டு கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமானது, ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பம் தெர்வித்து கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.


Tags : Air India ,Qatar Airways , Air India,does not,buy shares,IndiGo, Qatar Airways
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...