×

தெலுங்கானா பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற சம்பவம் எதிரொலி: அலுவலகத்தில் கயிறு கட்டி மனு வாங்கும் அதிகாரிகள்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பெண் வட்டாட்சியர் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், அச்சத்தில் ஆந்திராவில் கயிறு கட்டி பின்னால் நின்று அலுவலர்கள் மனுக்களை வாங்குகின்றனர். மனு அளிக்க விரும்புவோர் பாதுகாப்பான தூரத்திலிருந்து அளிப்பதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் பெண் வட்டாட்சியர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் அனைவரும் மரண பயத்தில் பணியாற்றி வருகின்றனர். தெலுங்கானாவில் அப்துல்லபூர்மெட் பெண் தாசில்தார் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டதால் எரித்து கொல்லப்பட்ட நிகழ்வானது இரண்டு மாநிலங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மனு அளிக்கவரும் பொதுமக்களின் இயல்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

பட்டா வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்ட ஒருவர் சித்தூர் மாவட்டம் கொரம்பாலா கோட்டா மண்டல வருவாய் அலுவலகத்திற்குள் பாயை விரித்து படுத்து உறங்கினார். இதே நிகழ்வு பல இடங்களிலும் நடந்தபடி உள்ளன. சித்தூர் மாவட்டம் ராமக்குப்பம் மண்டல அலுவலகத்திற்கு வந்த ஒரே குடும்பத்தினர் அலுவலகத்திற்குள் சென்று தூக்கில் தொங்கும் போராட்டத்தை நடத்தி உள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற போராட்டங்களை நடத்துவதால் அரசு அலுவலகங்களில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு முன்பே நிறுத்தப்படுகின்றனர். கயிறை தாண்டி யாரும் வர அனுமதிக்கப்படவில்லை. விஜயா ரெட்டி கொலைக்கு பின்பு தாங்கள் மிகவும் பயந்து போய் உள்ளதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு அலுவலர்கள்  பலர் தெரிவித்துள்ளனர்.


Tags : Telangana ,death ,Echo ,office personnel ,Manu , Telangana, Girl Circulator, Murder, Echo, Office, Rope, Petition, Officers
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து