×

இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தன்னை தானே மாய்த்து கொண்டு தற்கொலை செய்து கொள்வேன்: நிரவ் மோடி மிரட்டல்

லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என வைர வியாபாரி நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தலைமறைவாக இருந்த இவர் லண்டலின் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நீரவ் மோடி ஐந்தாவது முறையாக பெயில் வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறார். 4 முறை இவரின் மனுவை நீதிமன்றம் நீராகரித்துவிட்டது. அதனால் தாம் கடுமையான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி 5வது முறையாக நிரவ் மோடி தாக்கல் செய்தார்.

ஜாமின் மனுவை நேற்று விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அதையும் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து ஜாமின் மனு மீதான விசாரணையின் போது சிறையில் தன்னை மோசமாக நடத்துவதாகவும், தாம் மூன்று முறை தாக்கப்பட்டதாகவும் நிரவ் மோடி கூறியிருக்கிறார். மேலும் இந்தியாவிடம் தன்னை ஒப்படைத்தால் தன்னை தானே மாய்த்து கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையெல்லாம் கேட்ட நீதிபதி நிரவ் மோடியை வெளியில் விட்டால் சாட்சியங்களை களைத்து விடுவார் என்று கூறி 5வது முறையாக தாக்கல் செய்த ஜானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணையானது அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.


Tags : suicide ,India ,Nirav Modi ,Nirvana Modi , India, deportation, Nirav Modi, intimidation
× RELATED கொரோனா ஊரடங்கில் மன அழுத்தம் தொகுப்பாளினி தற்கொலை