×

புல்புல் புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவின் 14 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கதேசம் - மேற்கு வங்கத்திற்கு இடையே புல்புல் புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசாவின் 14 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புல்புல் புயலால் ஒடிசாவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், இருப்பினும் நவம்பர் 9-ம் தேதி கனமழை பெய்யக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார். நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் 10-ம் தேதி வரை, வெப்பச்சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டு்ள்ளத. மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடிக்க சென்றவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்பவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒடிசாவை தாக்கிய ஃபானி புயலால், 64 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : districts ,Odisha ,Bulbul ,Storm Rainfall , Rainfall,14 districts,Odisha,Meteorological Center
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை