×

பெரம்பலூரில் ஜார்ஜ் வாய்க்காலுக்காக இங்கிலாந்து மன்னரால் வெட்டப்பட்டு சாலையோரம் கிடந்த கல்வெட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் தெப்பக்குளத்தின் நீர் ஆதாரத்திற்காக 108 ஆண் டுகளுக்கு முன்பு இங்கிலாந்து மன்னரால் வெட்டப்பட்ட ஜார்ஜ் வாய்க்காலுக்கான கல்வெட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் நேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூரில் அமைந்து ள்ள தெப்பக்குளத்திற்கு 108 ஆண்டுகளுக்கு முன்பு, குடிநீர் ஆதாரத்திற்காக பெரம்பலூர் நகரின் மேற் குப் பகுதியிலுள்ள பச்சை மலையிலிருந்து உற்பத்தி யாகி வரும் கோனேறியா ற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுவர, 1911ம் ஆண் டு, அப்போது இந்தியாவை தனது காட்டுப்பாட்டில் வை த்திருந்த இங்கிலாந்து நாட் டின் மாமன்னர் 5ம் ஜார்ஜ் என்பவர் ஆட்சியில் கோ னேறி ஆற்றிலிருந்து அர ணாரை பிரிவுரோடு வந்து துறையூர் சாலையை ஒட்டி வடபுறம் வழியாக 3கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க் கால் வெட்டப் பட்டிருந்தது.

இந்தவாய்க்காலுக்கு மா மன்னர் ஜார்ஜ் பெயரிலே யே கல்வெட்டும் வாய்க்கா ல் ஓரத்தில் நட்டுவைக்கப் பட்டது. சுதந்திர இந்தியாவில் ஆட் சியாளர்களால் பராமரிப்பி ன்றி போனதாலும், தனியா ரால் ஆக்கிரமிக்கப் பட்டதாலும் தூர்ந்துபோன வாய்க் கால் இருந்ததற்கான தடய மே இப்போது இல்லாமல் போய்விட்டது. வடிவேலு திரைப்படத்தில் எனது கிணற்றைக் காணோம், ஆனால் கிணறு வெட்டிய தற்கான ரசீது மட்டும் உள் ளது என்பதுபோல் தற் போது நூறாண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட வாய்க் காலைக் காணவில்லை. ஆனால் அதற்கான கல்வெ ட்டு மட்டும் ஆங்கிலாந்து மாமன்னரின் கிரீடம் முத் திரையுடன் உள்ளது.

இந்தக் கல்வெட்டு இருப் பதால்தான் சமூக ஆர்வலர்களும், இளைஞர் அமை ப்பினரும் ஆக்கிரமிக்க ப்பட்ட நீர்நிலைகளை அரசே மீட்டெடுக்கும் அதிகாரத் தைப் பயன்படுத்தி கால்வாய் இருந்த வழித்தடத்தைக் கண்டுபிடித்து வாய்க்காலை மீட்டெடுங்கள் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சாலை விரிவாக் கம் செய்யும் நெடுஞ்சாலை த் துறையோ பழையை வரை படங்களை ஆராய் ச்சி செய்தால் சாலையும் அடிபடுமே என நினைத்து பெரம்பலூர் துறையூர் சாலையோரம் நின்றுகொ ண்டிருந்த கல்வெட்டை தூக்கியெறிந்ததால் அது புதர்களில் குப்புறக்கிடக் கிறது. இதுகுறித்து பெரம் பலூர் மாவட்ட சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா தொல்லியல் துறை ஆணையரும், அரசு அருங்காட்சியரக இயக்கு நருமான உதயச்சந்திரனு க்கு விடுத்தக் கோரிக்கை யில், மீண்டும் வரலாற்று திருப்பம் மிக்க வாய்க்கால் மீட்கப்பட வேண்டும். அது வரை அரிய பொக்கிஷமா ன கல்வெட்டை காப்பாற்றி அங்கேயே நிறுவவேண் டும். இதனை செயல்படுத் தும் வரை நூற்றாண்டுப் பழமைவாய்ந்த கல்வெ ட்டை காப்பாற்றவேண்டும் என வேண்டுகோள் விடு த்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தொ ல்லியல் துறை ஆணைய ரும், அரசு அருங்காட்சியரக இயக்குநருமான (கூடுதல் பொறுப்பு) உதயச்சந்திரன் உத்தரவின்பேரில் நேற்று, திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு அருங்காட்சியத்தின் (கூடுதல் பொறுப்பு) காப்பா ட்சியரான சிவக்குமார் என் பவர் பெரம்பலூர் துறையூர் சாலைக்கு வந்து அரணா ரை பிரிவுரோட்டுக்கு100மீட் டர் முன்பாக சாலையின் வடபுறம் புதருக்குள் கிடந்த நூற்றாண்டுப் பெருமை கொண்ட கல்வெட்டை நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து சிவக்குமார் தெரிவிக்கையில், அரசு அருங்காட்சியரக இயக்கு நர் உதயச்சந்திரன் உத்தரவின்பேரில் நேரில் பார்வையிட்டு ஆய்வறிக்கை அளிக்க உள்ளேன். நிஜத்தில் இது பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும். இதனை திருச்சி அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்றும் பாதுகாக்கலாம். அல்லது இங்கேயே மாவட்ட நிர்வாகம், நகராட் சி நீர்வாகம் துணையுடன் அதே இடத்தில் ஒரு கான்கிரீட் மேடைஅமைத்து அதில் நிறுவி வாய்க்கால் குறித்த விபரங்களோடு பெயர்ப் பலகை வைத்தால் மேலும் பலர் கண்டு அறிந்துகொள் ளவும், நூற்றாண்டு பழமை யைபாதுகாக்கவும் முடியும். அதற்கு தன்னார்வலர்கள் முன்வர வேண்டும், அரசும் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags : King ,England ,Perambalur ,George , Inscription
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...