×

பெரம்பலூரில் செவ்வாழை பழங்கள் குறைந்த விலைக்கு விற்பனை

பெரம்பலூர்: பெரம்பலூரில் வேன்களில் கொண்டுவந்து செவ்வாழை பழங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளை சிலர் விரட்டியடித்ததால் பரபரப்பு. பெரம்பலூரில் கடந்த சில வாரங்களாக வெளிமாவட்டங்களில் இருந்து செவ்வா ழைப் பழங்கள் வேன்களில் கொண்டுவந்து, ரஸ்தாலி, பூவன், கற்பூரவள்ளி போன் றப் பழங்களை தார், சீப், டஜன் என விற்பதுபோல் விற்காமல் ஒரு கிலோ ரூ 60 என குறைந்த விலை வைத்து விற்று வருகின்றனர். இது உள்ளூர் பழ வியாபாரிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக செவ்வாழைப் பழங்கள் அபூர்வமாக கொண்டுவந்து விற்பதால் ஒருபழமே ரூ.10 முதல் 15 வரை விலை வைத்து விற்கப் படுவதுண்டு. ஆனால் வேன்களில் கொண்டு வந்து விற்கப்படும் செவ்வாழைப் பழங்கள் கிலோ ரூ60க்கு விற்கப்பட்டதால் பழம் ஒவ்வொன்றும் ரூ.7முதல் ரூ.9வரைதான் வரும். இதனால் பலரும் வேன்களில் கொண்டுவந்த செவ்வாழைப் பழங்களை வாங்க ஆர்வம் காட்டினர். இதில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்ட 2 வேன்களில் குவிக்கப்பட்டிருந்த செவ்வாழைப் பழங்களை வாங்க 20க்கும் மேற்பட் டோர் குவிந்திருந்தனர். அப்போது அங்குவந்த உள்ளூரைச் சேர்ந்த சிலர் இந்தப் பழம் எங்கிருந்து வருகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ஈரோடு மாவட்டம் பவானி பகுதியிலிருந்து கொண்டு வந்ததாக வேன்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைக்கேட்டவுடன் ஆத்திரமுற்ற உள்ளூர் நபர்கள், அப்படியென்றால் இது ரசாயண பவுடர் கலந்த தண்ணீரில் முக்கியெடுத்து பழுக்கவைத்துக் கொ ண்டு வந்து விற்கப்படுகிறது. இதனை வாங்கி சாப்பிட்டால் மலட்டுத் தன்மை ஏற்படும், உடலில் பெயர் தெரியாத நோய்கள் வரும், எனவே இதனை யாரும் வாங்கி சாப்பிடாதீர்கள், நம்மூர் மக்களையே கெடுக்க வந்துள்ளார்கள். உடனே வேன் வியாபாரத்தை நிறுத்திவிட்டு வண்டியை கிளப்பி செல்லுங்கள் எனக்கூறி சத்தம்போட்டனர்.
அதனால் அதிர்ச்சியடைந்த வேன் வியாபாரிகள், நாங்கள் மலையடிவாரத்தில் சொந்த நிலத்தில் விளைந்த பழங்கழைத்தான் கொண்டு வந்துள்ளோம். இதில் ரசாயணம் கலக்க வேலையில்லை எனக்கூறியதால் இருதரப்பினரிடையே வாக் குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து உள்ளூர் பிரமுகர்கள் திட்டிக்கொண்டே இருந்த தால், எதற்கு வெளியூரில் வம்பு என நினைத்து வேன்களில் செவ்வாழைப் பழங் களை விற்றவர்கள் நகருக்குள் விற்காமல் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து விசாரித்த போது பெரம்பலூரைச் சேர்ந்த சிலர் போட் டியாக நினைத்துத்தான் வேன் வியாபாரிகளை விரட்டியடித்தனர் என தெரியவந்தது.

Tags : Mars ,Perambalur Banana , Banana fruits
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...