×

திருபுவனை அருகே கோயில் குளம் தூர்வாரும் பணி

திருபுவனை: திருபுவனை அருகே அய்யனாரப்பன் கோயில் குளம் தூர் வாரும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார். திருபுவனை அருகே ஆண்டியார்பாளையம் பகுதியில் பன்னிக்குத்து அய்யனாரப்பன் குளம் உள்ளது. 2 ஏக்கரில் பரந்து விரிந்து இருந்த இந்த குளம் ஆக்கிரமிப்பு காரணமாக இப்போது இருந்த இடம் தெரியாமல் போனது. இது குறித்து அப்பகுதி மக்கள், கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த குளத்தை தூர் வார வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலை மூலம் குளத்தை தூர்வார கலெக்டர் அருண் நடவடிக்கை எடுத்தார். அதன்படி நேற்று காலை பூமி பூஜையுடன் குளம் தூர்வாரும் பணி தொடங்கியது. கலெக்டர் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோபிகா எம்எல்ஏ, ஆணையர் ஜெயக்குமார், கூடுதல் பொறியாளர் நாகராஜ், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் மற்றும் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, மதகடிப்பட்டுபாளையம் பகுதியில் உள்ள மோட்ச குளம் என்று அழைக்கப்படும் ஊறல் குளத்தை தூர் வார கலெக்டரும், எம்எல்ஏவும் ஆய்வு மேற்கொண்டனர். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குள் 97 குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் உடனடியாக தூர் வாரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Tags : Temple ,pond ,Thirubuvan Tirupuvanai , Tirupuvanai
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...