×

மன்னார்குடி அடுத்த வடுவூரில் சிதிலமடைந்த வருவாய் ஆய்வாளர் கட்டிடம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் வடுவூர் வருவாய் கிராமத்தில் தென்பாதி, வடபாதி, அக்ரகாரம், மூவர்கோட்டை, புதுக்கோட்டை, சாத்தனூர் உள்ளிட்ட 17 கிராமங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களின் வசிக்கும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பட்டா, சிட்டா, மாணவர்களுக்கு தேவையான ஜாதி, வருமான சான்றிதழ், விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை பெற தேவையான சான்றுகளை பெறுவது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பயன்பாட்டிற்காக வடுவூர் ஊராட்சி அலு வலகம் அருகில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாலும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் அலுவலக கட்டிடம் மிகவும் சேதமடைந்து விட்டது.

இதனால் சான்றுகள் பெறுவதற்காக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இக்கட்டிடம் மேலும் கடுமையாக சேதமடைந்து தற்போது பயன்பாட்டிற்கு லாயக்கற்ற வகையில் இருக்கிறது.இதனால் பாதுகாப்புக்கருதி இந்த அலுவலகம் கடந்த ஓராண்டாக பயன்பாட் டில் இல்லை. இதனால் இதில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் அருகிலுள்ள விஏஓ அலுவலகத்தில் தற்காலிகமாக இருந்து கொண்டு பணியாற்றி வந்தார். ஏற்கனவே விஏஓ அலுவலகம் சிறிய கட்டிடத்தில் இயங்கி வருவதால் கூடுதலாக அங்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்படுவதில் இடநெருக்கடி காரணமாக சிக்கல் நிலவியது. அதனால் வேறு வழியின்றி சேதமடைந்து எந்த நேரமும் இடிந்து விழக் கூடிய நிலையில் உள்ள பழைய அலுவலகத்திலேயே வருவாய் ஆய்வாளர் பணியாற்றி வருகிறார். இது அவருக்கு மட்டுமின்றி அந்த அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே வருவாய்துறை உயரதிகாரிகள் மேற்கண்ட சேதமடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு போதிய நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டி அதில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை செயல்பட உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண் டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Revenue Analyst Building ,Vadavoor Mannarkudi , Mannarkudi
× RELATED தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100...