×

மண்ணச்சநல்லூர் பகுதியில் வனத்துறையினரிடம் சிக்கிய 80 அட்டகாச குரங்குகள்

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் பகுதியில் அட்டகாசம் செய்த 80 குரங்குகளை பிடித்து வனத்துறையினர் மலைப்பகுதியில் விட்டனர். மண்ணச்சநல்லூர் பகுதிகளில் குரங்குகள் நாளுக்கு நாள் அட்டகாசம் செய்ததை குறித்து மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் வனத்துறையினருக்கு அதிரடியாக குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தெடர்ந்து மண்ணச்சநல்லூர் பகுதியில் புத்தானம்பட்டி மற்றும் எதுமலை சுற்று வட்டார பகுதியில் நேற்று 80 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து உப்பிலியபுரம் அருகே உள்ள மலைப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். மேலும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் திருப்பட்டூர், சனமங்கலம், எம்.ஆர்.பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, வாளையூர் ஆகிய பகுதிகளில் குரங்குகள் விவசாயிகள் நிலத்தை, பயிர்களை நாசம் செய்வதுடன் வீட்டில் உள்ள பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து 80 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர். விவசாயிகளின் நிலத்தை அட்டகாசம் செய்த குரங்குகளை கலெக்டர் போர்க்கால அடிப்படையில் உடனே பிடித்து அப்புறப்படுத்தியமைக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : forest area ,Manachanallur , Manachanallur
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள்...