×

உலகளாவிய நாவல்களில் ஆர்.கே.நாராயண், அருந்ததி ராய் உள்ளிட்ட 4 இந்திய எழுத்தாளர்களின் நாவல்கள் தேர்வு

புதுடெல்லி: உலகளாவிய அளவில் வாசகர்களின் மனம் கவர்ந்த 100 ஆங்கில நாவல்களில் சல்மான் ருஷ்டி உள்ளிட்ட 4 இந்தியர்களின் நாவல்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச செய்து குழுமமான பி.பி.சி-ன் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய வல்லுனர்களும் இந்த பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. நம் உலகை செதுக்கிய நாவல்கள் என்ற தலைப்பில் இந்த 100 நாவல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடையாளம், அன்பு, காதல், காமம், அரசியல், அதிகாரம், போராட்டம், வர்த்தகம் மற்றும் சமூகம் ஆகிய பிரிவுகளில் நிபுணர்கள் குழு இவற்றை தேர்வு செய்துள்ளன. அதன்படி,

* காஷ்மீர் பிரச்சனையில் பாரதிய ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வரும் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராயின் முதல் நாவலான The god of small things என்ற நாவல் அடையாளம் பிரிவில் தேர்வாகியுள்ளது.

* புகழ் பெற்ற மூத்த நாவல் ஆசிரியரான ஆர்.கே.நாராயண் எழுதிய swamy and friends என்ற நாவல் இனி வரும் காலம் என்ற பிரிவில் இடம்பிடித்துள்ளது.

* சாத்தானின் வேதங்கள் என்ற சர்ச்சைக்குரிய நாவலின் ஆசிரியரான சல்மான் ருஷ்டி எழுதிய Moors last sigh என்ற நாவல் விதிகளை உடைக்கும் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


* நாவல் ஆசிரியரும், எழுத்தாளருமான விகரம் சேத் எழுதிய A suitable boy நாவல் குடும்பம் மற்றும் உறவுகள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

மேலும் இந்த பட்டியலில் 2 பாகிஸ்தான் எழுத்தாளர்களின் நாவல்களும் இடம் பெற்றுள்ளன. மொஹ்சின் ஹமீத் மற்றும் கமிலா ஷம்ஸி ஆகிய இரு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொஹ்சின் ஹமீத் எழுதிய The Reluctant Fundamentalist நாவல் குற்றம் மற்றும் மோதல்’ பிரிவில் இடமும் பெற்றுள்ளது. அதேபோல, கமிலா ஷம்ஸி எழுதிய Home Fire என்ற நாவல் அரசியல், சக்தி மற்றும் எதிர்ப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

Tags : writers ,Indian ,Arundhati Roy Selection ,RK Narayan ,Arundhati Roy ,authors , Novels, BBC Expert Group, Selection, Indian Novels Selection, RK Narayan, Arundhati Roy
× RELATED விருதுநகரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு