×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு: சவரன் ரூ.29,408-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு உயர்ந்து ரூ.29,408-க்கும், ஒரு கிராம் ரூ.3,676-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.29.264க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 குறைந்து ரூ.3,658க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் காணப்படுகிறது.

மேலும் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சற்று இரக்கம்  காணப்பட்டு தான் நிலையில் இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து 50.50 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ ரூ.50,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முன்தைய தினம் நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,678 க்கும் ஒரு சவரன் ரூ.29,536கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.30 க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில், 3வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் உள்ளது. காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.29.408க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai , price ,jewelery gold,Chennai rose ,Rs 144 to Rs.29,408
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...