×

கடந்த ஆண்டை விட முன்கூட்டியே பனி தொடங்கியது: சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நீடிக்கும் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னையில் நிலவும் பனி மூட்டம் மற்றும் காற்று மாசுபாட்டால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியிருப்பது போல சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் காற்றின் தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் பனியால் காற்றின் அடர்த்தி அதிகமாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன. நீலகிரி மற்றும் நாகை மாவட்டங்களில் நிலவும் பனிப்பொழிவால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு காணப்படும்; இந்த ஆண்டு முன்னதாகவே அதிக பனிப்பொழிவு தொடங்கியுள்ளதாகவும், இதனால் காலையில் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடும் பனிப்பொழிவால் பயிர்கள் கருக வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்போர்வை போர்த்தப்பட்டது போல கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. காலை 8 மணி வரையிலும் பனியின் தாக்கல் சற்றும் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது. சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மண்டலம் போல காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், விபத்துக்களை தவிர்க்க ஒலிபெருக்கியை ஒலிக்க செய்தவாறும், செல்கின்றனர்.


Tags : places ,Chennai , Chennai, heavy snow, motorists,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்