×

அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைசகர்களிடம் பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெற்றி, தோல்வி என்ற காணோட்டத்தில் பார்க்க கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூற வேண்டாம் என கட்சி நிர்வாகிகளிடமும், செய்தி தொடர்பாளர்களிடமும் பாரதிய ஜனதா மேலிடம் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று அமைதியை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அதற்கு முன்பு அயோத்தி நில பிரச்சனை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அயோத்தி வழக்கில் அனைவரும் வரவேற்கத்தக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 13ம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இரு சமூகங்களுக்கு இடையே சகோதரத்துவ மதிப்புகளை வெளிப்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : ministers ,Modi ,Ayodhya , Ayodhya Case, Ideas, Ministers, Prime Minister Modi, Advice, Supreme Court
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...