×

வானவில்லின் வர்ணஜாலம்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

வானவில் மழைத்துளிகளை ஊடுருவி சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும்போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளிப் பிரிகையடைந்து ஏழு  நிறங்கள் வானத்தில் வில் போல வளைந்து தெரிகின்றன. வானவில் தோன்றுவதற்கு மழை மட்டுமே காரணம் என்று சொல்லிட முடியாது. பனி  மூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் இவையும் முக்கியக் காரணங்களாக உள்ளன.  வானவில்லில் தெரியும் ஏழு வண்ணங்களை ஆங்கிலத்தில் VIBGYOR (Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red) என்று குறிப்பிடுவார்கள்.  சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா ஆகியவையே அந்த வண்ணங்கள்.

பொதுவாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர்த் திசையில் தோன்றும். நமது கண்களுக்குத்  தெரிவது போல வானவில் உண்மையில் அரை வட்டமாக இருக்காது. முழு வட்ட வடிவில்தான் வானவில் தோன்றும். வளிமண்டலத்தின்  மேற்பகுதியிலிருக்கும் அரை வட்டத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட சில கோணங்களிலிருந்து மட்டுமே வானவில்லைக்  காணமுடியும். அதனால்தான் நாம் பார்க்கிற வானவில்லை, வேறு ஊரில் இருப்பவர்கள் பார்க்க முடிவதில்லை. வானவில்லில் இரண்டு வகை உண்டு.  முதல் வகையில் வெளிப்பக்கம் சிவப்பு நிறமும், உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும். இரண்டாவதில், வெளிப்பக்கம் ஊதாவும், உள்பக்கம் சிவப்பும்  காணப்படும். கானல் நீரைப்போல வானவில்லும் ஒளிச்சிதறல் மூலம் உருவாகும் ஒரு பிம்பம்

Tags : Rainbow , Rainbow, rain drops, lasers
× RELATED தி.க. கூட்டத்தில் கண்டன தீர்மானம்...