×

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நியூயார்க்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து ஐ.நா.வில் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. இது தொடர்பாக கடந்த 29-ம் தேதி  பாதுகாப்பு கவுன்சிலிலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது. குறிப்பாக காஷ்மீரின் தற்போதைய நிலவரம், அங்கு பெண்களின் நிலை என பல்வேறு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி மலீகா லோதி கூறியிருந்தார். இதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அமைதி, பாதுகாப்பு மற்றும் பெண்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த விவாதத்தில் இந்தியா சார்பில் பேசிய ஐ.நா.வுக்கான நிரந்தரக்குழு செயலாளர் பாலோமி திரிபாதி, பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் அந்த நாடு மீது மறைமுகமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து பேசினார். ஐ.நா.வின் பல்வேறு மன்றங்களிலும், அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு முரணாக காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி குற்றச்சாட்டுகளை கூறுவதை அவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுத்து வருகிறோம். அதேநேரம் இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளில் ஐ.நா. மன்றங்களும் கவனம் செலுத்தவில்லை.

இதையே தொடர வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பயங்கரவாதிகள் ஏவி விடும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை பொது வாழ்விலும், தனிப்பட்ட முறையிலும் அடிமைப்படுத்துவது தொடர் கின்றது என பாலோமி திரிபாதி கூறியுள்ளார்.


Tags : Pakistan ,UN ,India , Kashmir affair, Pakistan, UN, India
× RELATED கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல்...