×

நடிகர் ரஜினியை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்தார். சென்னை, போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சென்றார். அங்கு அவர் ரஜினயை சந்தித்து பேசினார். ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழா பொன்விழா ஆண்டு சிறப்பு விருதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதற்காக ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Rajinikanth ,Radhakrishnan , Actor Rajinikanth met, Pon. Radhakrishnan
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...