×

‘புதிய தேசிய கல்வி கொள்கை நாட்டை மையப்படுத்தி இருக்கும்’

பாக்வாரா: பஞ்சாபில் உள்ள லவ்லி தொழிற்பயிற்சி கல்லூரியில் நடந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசியதாவது: புதிய கல்வி கொள்கை இந்தியாவை மையமாக கொண்டிருக்கும். இதன் மூலம், புதிய இந்தியா கட்டி எழுப்பப்படும். புதிய கல்வி கொள்கையின் மாதிரியை வரையறுக்க மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகிறோம்.இதுவரை ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் மிகுந்த அக்கறையுடன் கவனத்துடன் கேட்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிவு, அறிவியல், ஆராய்ச்சி, கருத்துகள், பாரம்பரியம் ஆகியவை ஏராளமாக கொட்டி கிடக்கிறது. இந்தியா முன்பு போல் வசதியற்ற நாடாக ஒரு மூலையில் முடங்கி கிடக்கவில்லை. உலகமே நம்மை உற்று நோக்கி வருகிறது என்றார்.

Tags : country , New national education policy
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!