×

பேட்டிங் வரிசை நன்றாகவே உள்ளது... இந்திய அணி கேப்டன் ரோகித்

எங்கள் அணியின் பேட்டிங் சிறப்பாகவே அமைந்துள்ளது. எனவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால், ஆடுகளத்தின் தன்மையை பொருத்து தேவையான முடிவுகளை எடுப்போம். முதல் போட்டியில் டெல்லி ஆடுகளத்துக்கேற்பவே வேகப் பந்துவீச்சு கூட்டணியை அமைத்தோம். ராஜ்கோட் பிட்ச்சை பார்த்த பிறகு பந்துவீச்சு வியூகத்தை இறுதி செய்வோம். இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதுடன், பந்துவீச்சாளர்களுக்கும் ஓரளவு ஒத்துழைக்கும். டெல்லியை விட சிறப்பான ஆடுகளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

100வது டி20ல் ரோகித்!

வங்கதேசத்துக்கு எதிராக ராஜ்கோட்டில் இன்று நடைபெறும் 2வது டி20 போட்டி, இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா விளையாடும் 100வது சர்வதேச டி20 போட்டியாகும். இந்த சாதனை மைல்கல்லை எட்டும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 111 போட்டியில் விளையாடி முன்னிலை வகிக்கிறார். ஷாகித் அப்ரிடி (99 போட்டி), எம்.எஸ்.டோனி (98 போட்டி) அடுத்த இடங்களில் உள்ளனர். விராத் கோஹ்லி இதுவரை 93 டி20ல் களமிறங்கி உள்ளார்.



Tags : Rohit ,batting ,Indian , batting line up is good,Indian captain Rohit
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...