×

ராஜ்கோட்டில் இன்று 2வது டி20 வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

ராஜ்கோட்: இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி, ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுக்க, அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து வென்றது. இந்திய பேட்டிங்கில் தவான் (41 ரன்), ஷ்ரேயாஸ் (22), ரிஷப் பன்ட் (27), குருணல் பாண்டியா (15*), வாஷிங்டன் சுந்தர் (14*) ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரகிம் ஆட்டமிழக்காமல் 60 ரன் விளாசி வெற்றிக்கு வழிவகுத்ததுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

வங்கதேம் 1-0 என முன்னிலை வகிக்க 2வது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. சொந்த மண்ணில் நடக்கும் இந்த தொடரில் பின்தங்கியுள்ள இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்குகிறது. அதே சமயம், தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றி சாதனை படைக்க வங்கதேசம் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. இந்தியா: ரோகித் (கேப்டன்), கலீல் அகமது, சாஹல், தீபக் சாஹர், ராகுல் சாஹர், தவான், துபே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, குருணல் பாண்டியா, ரிஷப் பன்ட் (கீப்பர்), கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர். வங்கதேசம்: மகமதுல்லா (கேப்டன்), அபு ஹைதர், ஆபிப் உசேன், அல் அமின் உசேன், அமினுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், அராபத் சன்னி ஜூனியர், முகமது மிதுன், முகமது நயிம், மொசாடெக் உசேன், முஷ்பிகுர் ரகிம், முஸ்டாபிசுர் ரகுமான், ஷபியுல் இஸ்லாம், சவும்யா சர்க்கார், தைஜுல் இஸ்லாம்.  


Tags : India ,Rajkot ,Bangladesh , India retaliate , 2nd T20, Rajkot today?
× RELATED ராஜ்புத்திரர்களின் கடும்...