×

கொசு ஒழிப்புக்கு நவீன இயந்திரம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க பொதுசுகாதாரத்துறையின் சார்பில் ரூ.37,91,333 மதிப்பீட்டில் கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள இயந்திரங்களை விட இருமடங்கு திறன் கொண்டது.  இவ்வியந்திரங்கள் தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய ஏழு மண்டலங்களில் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், இணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) லலிதா, துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Modern apparatus,mosquito eradication
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...