சிறுமியுடன் திருமணம் போக்சோவில் வாலிபர் கைது

பெரம்பூர்: சென்னை மகாகவி பாரதிநகர் பி.வி.காலனி பகுதியை சேர்ந்தவரின் தஞ்சாவூரை சேர்ந்த உறவினர் மகள் 17வயது சிறுமி மூலக்கடை கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் சிறுமி காணவில்லை என அவரது பாட்டி கலைச்செல்வி எம்கேபி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்கேபி நகர் போலீசார் விசாரித்தனர். விசாரனையில் சிறுமி தஞ்சாவூரில் படிக்கும்போது ஆட்டோ ஓட்டுநரான விஜய் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்த சிறுமியின் பெற்றோர்கள் சென்னையில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இங்கு வந்து கல்லூரியில் சேர்ந்த பின்பும் தஞ்சாவூரில் பழக்கமான ஆட்டோ டிரைவர் விஜய் சென்னை வந்து சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் சிறுமியை அழைத்துக் கொண்டுபோய் கோயம்பேட்டில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலி கட்டி அதே பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என தெரியவந்தது. இந்நிலையில், சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரில் அடிப்படையில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்செல்வி போக்சோ சட்டத்தில் விஜய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>