×

ஓரே நேரத்தில் மாரடைப்பு, பக்கவாதம் நோய்க்கு நவீன சிகிச்சை : அப்பல்லோ மருத்துவர்கள் சாதனை

சென்னை: ஓரே நேரத்தில மாரடைப்பு, பக்கவாதத்தால் பாதிப்பட்டவர்களுக்கு நவீன சிகிச்சை அளித்து அப்பல்லோ மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். ஒரே நேரத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாத்தால் பாதிக்கப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவால் நிறைந்தது ஆகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட நான்கு பேரை நவீன சிகிச்சை மூலம் ஓம்எம்ஆர் உள்ள அப்பல்லோ பல்நோக்கு  மருத்துவமனை  மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படுவர்களை கோல்டன் டைம் எனப்படும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இதன்படி அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சை துறை மருத்துவர் கார்த்திகேயன், இதய சிகிச்சை துறை மருத்துவர் அருள், 24 மணி நேரம் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு  மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள், கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள், பக்கவாதத்தைக் கையாளப் பயிற்சி பெற்ற செவிலியர் மற்றும் பிசியோதெரபி முறை நிபுணர்கள் ஆகியோர் கொண்ட குழு விரைந்து செயல்பட்டு அவர்களுக்கு நவீன சிகிக்கை அளித்து குணப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நரம்பியல் சிகிச்சை துறை மருத்துவர் கார்த்திகேயன் கூறியதாவது: தமிழகத்தில் பக்கவாதத்தால் ஒரு லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் 8,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில், 20 சதவீதம் பேர் மட்டுமே உரிய நேரத்தில் சிகிச்சை பெறுகின்றனர். பக்கவாதம் ஏற்பட்டு, 40 நிமிடத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், மாத்திரை வாயிலாக, மூளை ரத்தநாள அடைப்புகளை சரி செய்ய முடியும். சமீப காலமாக 40 வயதுக்கு குறைவானவர்கள் அதிகளவில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நோயாளிக்கு, ஒரே நேரத்தில் பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவது, இந்தியாவிலேயே முதன்முறை. இதுபோன்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கடினம். முதலில் ஆன்ஜியோபிளாஸ்டிக் வயிலாக, இதய ரத்தநாள அடைப்புகளை சீர் செய்தோம். பின், திரோம்பக்டமி மற்றும் திரோம்போலிசிஸ் சிகிச்சை வாயிலாக, மூளை ரத்தநாள அடைப்புகள் சரி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : physicians , Modern treatment ,heart attack and stroke,Apollo physicians' achievement
× RELATED பெரம்பலூரில் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்