×

வாலிபர் கொலை வழக்கு கோர்ட்டில் ஒருவர் சரண்

துரைப்பாக்கம்: சென்னை, பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (28). காரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் முரளி வழக்கம்போல் பணிக்கு வந்துவிட்டு அருகில் உள்ள கடையில் நின்று தேனீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒருவர் முரளியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்றார். இதில் முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து முரளியின் மனைவி கவுசல்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலை செய்தவர் யார்? கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் முரளி பணிபுரிந்து வந்த அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த  லட்சுமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் சுமார் 3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர். பின்னர், லட்சுமி அரவிந்தன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதேப்போல் முரளியும் கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பிரிந்து சென்ற இருவரும் அவரவர் வீட்டிற்கு தெரியாமல் மீண்டும் பேச தொடங்கினர். மேலும் பழகியும் வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தனது மனைவி முன்னாள் காதலன் முரளியுடன் கள்ளக்காதலில் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து முரளியை சந்தித்து பேச்சுவார்த்தையில் நடத்த சென்ற அரவிந்தன் திடீரென பேசிக்கொண்டிருக்கும்போதே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார். இதையடுத்து போலீசார் அரவிந்தனை தீவிரமாக தேடி வந்த நிலையில் மாதவரம் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க கண்ணகி நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Charan ,plaintiff ,court ,Saran , Plaintiff's murder case, Court is Saran
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...