×

செக்ஸ் கல்வி என்று கூறி மாணவ, மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து காதலனுடன் ரசித்த டீச்சர்

* 20 சவரன், பல லட்சம் பணம் பறிப்பு
* ஓட்டல்களுக்கு அழைத்து சென்றது அம்பலம்
* பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை:  டியூசனில் படித்த மாணவ, மாணவிகளிடம் செக்ஸ் கல்வி என்று கூறி  ஆபாச படம் எடுத்து தனது காதலனுடன் ரசித்ததாக ஆசிரியை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவிகளை வசியப்படுத்தியது குறித்து பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா(28), பட்டதாரியான இவர் வீட்டிலேயே டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூசன் சென்டரில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், டியூசனில் படித்து வரும் மாணவி ஒருவர் சோர்வடைந்த நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது, டியூசன் சொல்லிக்கொடுக்கும் சஞ்சனா டீச்சர் மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜி (38) ஆகியோர் தன்னை மிரட்டி உடன் படிக்கும் சக மாணவனுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருக்க வைத்து படமும், வீடியோவும் எடுத்ததாக தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனே புகார் அளித்தனர்.

 புகாரின் அடிப்படையில் டீச்சர் சஞ்சனா மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜி மீது போலீசார் ஐபிசி 375, 376, 383, 386, 387, 503 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவர்களிடம் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.   இந்த வழக்கில் பாலாஜி மாணவிகளை ஓட்டலுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது தனது நண்பர்களையும் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் வகையில் சென்னை மாநகரில் டியூசன் சென்டரில் படித்த பல மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்ட டீச்சர் சஞ்சனா, அவரது ஆண் நண்பர் பாலாஜி ஆகியோர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

சஞ்சனா பல ஆண்டுகளாக டியூசன் எடுத்து வருகிறார். இவருக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் பாலாஜிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காரணமாக பாலாஜி, சஞ்சனா நடத்தும் டியூசன் சென்டருக்கு  அடிக்கடி வந்து செல்வார். மேலும், சஞ்சனாவுக்கு பல வேலைகளையும் அவர் செய்து வந்தார். இதனால் சஞ்சனாவுக்கும் பாலாஜிக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியது. இதனால் சஞ்சனா வீட்டிற்கு தெரியாமல் தனது காதலனுடன் டியூசன் சென்டரிலேயே அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார்.
சஞ்சனா செக்ஸ் விஷயத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்ததால் பாலாஜி கொடுத்த யோசனையின் அடிப்படையில், தன்னிடம் டியூசன் படிக்க வந்த அழகான மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் விரும்பி பழகி ஆசை வார்த்தைகளை கூறி செக்ஸ் தொடர்பான பிராக்டிக்கல் என்று கூறி மாலையில் டியூசன் முடிந்த உடன் டியூசன் சென்டரிலேயே உள்ள தனி அறையில் மாணவ, மாணவிகளை நிர்வாணப்படுத்தி, ஒன்று சேர வைத்து, அதை தனது ஆண் நண்பர் பாலாஜி செல்போனில் வீடியோ படம் எடுக்க வைத்துள்ளார். அப்போது டியூசன் டீச்சரான சஞ்சனா மாணவன், மாணவியை பல கோணங்களில் நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துள்ளார்.

பின்னர் எடுக்கப்பட்ட மாணவிகளின் வீடியோக்களை சஞ்சனா, பாலாஜியுடன் சேர்ந்து லேப்டாப்பில் அதை பார்த்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் வசதி படைத்த மாணவ, மாணவிகள் இருந்ததால், அவர்களிடம் வீடியோவை காட்டி பாலாஜி பணம் பறித்து வந்துள்ளார். அந்த வகையில் ஒரு மாணவியிடம் 20 சவரன் நகை மற்றும்  2 லட்சம் பணத்தை இருவரும் பறித்துள்ளனர். இதுபோல் பல மாணவ மற்றும் மாணவிகளிடம் நகை மற்றும் பணத்தை மிரட்டி பறித்து வந்துள்ளனர்.  அப்படி பணம் கொடுக்க முடியாத மற்றும் சம்பவம் குறித்து  வீட்டில் சொல்லமுடியாத  மாணவிகளிடம் ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி பாலாஜி தனது காதலிக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதுபோல் பல மாணவிகளை பாலாஜி மிரட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து ெசன்று தனிமையில் இருந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த சஞ்சனா தன்னை விட்டு காதலன் விலகி ெசன்று விடுவான் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி தனது காதலனுக்கு மாணவிகளை இறையாக்கிள்ளார். அதில் சம்பந்தபட்ட மாணவி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் சொல்லியதால் இருவரும் தற்போது மாட்டி கொண்டதாக தெரிவித்தனர். இதுபோல் பல மாணவ, மாணவிகளை ஒன்றாக டியூசன் சென்டர் மற்றும் ஓட்டல்களுக்கு அழைத்து சென்று சஞ்சனா தனது ஆண் நண்பர் பாலாஜியுடன் கடந்த ஓராண்டாக வீடியோ எடுத்து பணம் மற்றும் நகைகளை பறித்து வந்துள்ளனர். செக்ஸ் கல்வி என்ற பெயரில் வீடியோ எடுத்ததால் மாணவ, மாணவிகள் யாரும் வெளியில் சொல்லவில்லை. பணம் பறித்ததால் தற்போது இருவரும் சிக்கலில் மாட்டி கொண்டதாகவும் தெரிவித்தனர்.

Tags : Sex Education, Student, Students, Porn Video, Teacher
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...