×

அதிமுக அமைப்பு செயலாளர்கள் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதிமுக அமைப்புச் செயலாளர்களாக சொரத்தூர் ராஜேந்திரன் (முன்னாள் எம்எல்ஏ), தாமோதரன் (முன்னாள் அமைச்சர்); தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக கோபாலகிருஷ்ணன்,(மதுரை முன்னாள் எம்.பி.), எம்.ஜி.ஆர் மன்றத்தின் இணைச் செயலாளராக     பா.வெ.தாமோதரன் (முன்னாள் அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Secretaries ,AIADMK , AIADMK Secretaries
× RELATED நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகை மீண்டும்...