×

ரேஷன் கடை ஊழியர்கள் 11ம் தேதி வேலை நிறுத்தம்

தர்மபுரி: தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வரும் 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.தர்மபுரி மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் குமார், பொருளாளர் ஜான்ஜோசப் ஆகியோர் கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு சிவில் சப்ளை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க ேவண்டும்.

பணி வரன்முறை செய்யவேண்டும். அனைத்து கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘எங்களது சங்க நிர்வாகிகளை அழைத்து, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 11ம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர்.

Tags : Ration shop employees , Ration shop ,staff, Strike
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை சங்கத்தினர் மனு