8.8 கோடி நிதி மோசடி மபி. காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் யூகோ வங்கியில் நடந்த 8.08 கோடி நிதி மோசடி தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ரகுராஜ் சிங் கன்சானாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.மத்திய பிரதேசத்தில் உள்ள மொரெனா சட்டப்பேரவை தொகுதியில், காங்கிரசை சேர்ந்த ரகுராஜ் சிங் கன்சானா எம்எல்ஏ.வாக இருக்கிறார். இவரது சகோதரர் குஷால் சிங், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, யூகோ வங்கியில் இருந்து .8.08 கோடி கடன் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, அவரிடம் விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், மொரெனா தொகுதி எம்எல்ஏ ரகுராஜ் சிங் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.இது தொடர்பாக ரகுராஜ் சிங் கூறுகையில், ``எனது சகோதரர் கிடங்குகளின் பேரில் வங்கி கடன் பெற்றுள்ளார். இது தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக சிபிஐ.யினர் மொரெனாவில் உள்ள பண்ணை வீட்டிற்கு வந்தனர். இந்த வழக்கில் வங்கி மேலாளரும் குற்றவாளி ஆவார். இது எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசியல் சதி, என்றார். யூகோ வங்கியில் இருந்து கடன் பெறுவதற்காக குஷால் சிங், முறைகேடாக தனது உறவினர்கள், வேலையாட்கள் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெற்றது தெரிய வந்துள்ளது.Tags : CBI ,raids ,Congress MLA ,home , MP. Congress, MLA, CBI , home
× RELATED கேங்மேன் பணி நியமன முறைகேடு சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு