×

பிரசாதத்தில் சயனைடு கலந்து 10 பேரை கொலை செய்த 2 பேர் கைது

திருமலை: ஆந்திராவின் ஏலூரில் எஸ்பி நவ்தீப் சிங் கூறியதாவது:  ஆந்திராவில், ஏலூரில் உள்ள என்டிஆர் காலனியை சேர்ந்த சிம்மாத்திரி என்ற சிவா என்பவர் அக்‌ஷய பாத்திரத்தில் வைத்து பணம் மற்றும் நகையை இரட்டிப்பு செய்வதாக கூறி, தனது உறவினர் உட்பட 10 பேரை கொலை செய்து உள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த சயனைடு விற்பனை செய்த விஜயவாடாவை சேர்ந்த சேக் அமிம்முல்லா  என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் 16ம் தேதி ஏலூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜ் என்பவர் ஏலூர் பைபாஸ்   சாலையில் இறந்து கிடந்தார். மேலும்,  அவர் கையில் எடுத்துச் சென்ற இரண்டரை லட்சம் பணம், நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து நாகராஜன் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் சிம்மாத்திரி குறித்த தகவல் கிடைத்தது. இவர் நாகராஜ் இறப்பதற்கு முன்பு சனைடு கலந்த பிரசாதத்தை வழங்கியதும், அதனை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே நாகராஜ் இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சிம்மாத்திரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கடந்த 20 மாதங்களில் 10 பேரை இதே போன்று பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதில், அவருடைய பாட்டி மற்றும் மைத்துனரின் மனைவியும் அடங்குவர். இந்த கொலைக்கு காரணம் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் தனக்கு ஏற்பட்ட  நஷ்டத்தால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, அவர் திட்டம் தீட்டியுள்ளார். பிரசாதத்தில் சயனைடு கலந்து கொலை செய்தால்  இறந்தவர் உடலில் எந்தவித மாற்றமும் இருக்காது. மாரடைப்பு அல்லது இயற்கையான மரணம் போன்று இருக்கும் என்பதால் சயனைடு மூலம் கொலைகள் செய்து இருக்கிறார்.

நாகராஜ் கொலை சம்பவத்தில் அவரது உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் 2018ம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் 16ம் தேதி வரை சிம்மாத்திரி கொலைகள் செய்ததும், அதற்கு ஷேக் அமிம்முல்லா உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து ஷேக் அமிம்முல்லா, சிம்மாத்திரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிம்மாத்திரி இந்த கொலை சம்பவம் மூலம் ₹28 லட்சம், 35 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளார். தற்போது அவரிடமிருந்து 1.63 லட்சம் பணம், 23 சவரன் நகைகள், சயனைடு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : Prasad 10 ,murder , Prasad, mixing ,cyanide,murder
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு