×

தெலங்கானா மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு போவதாக இருந்தால் 2 மாத விடுப்பில் செல்ல வேண்டும்: போலீசாருக்கு அதிரடி உத்தரவு

திருமலை: தெலங்கானாவில் ஐயப்ப மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லக்கூடிய போலீசார் 2 மாதம் விடுமுறை எடுத்து செல்ல வேண்டும் என ராட்சகொண்டா காவல்துறை ஆணையாளர் மகேஷ் பகவத் உத்தரவிட்டுள்ளார்.சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து செல்வது வழக்கம். காவல்துறையினர் இந்த நிபந்தனைகளின்படி சீருடை அணியாமல் விரதத்திற்கு ஏற்ப தாடி, மீசை வளர்த்துக் கொள்வதற்கு உயரதிகாரிகளின்  அனுமதி பெறவேண்டும். இதற்காக  அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார்  காவல்துறை ஆணையர் மற்றும்  டிஐஜி.யிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில்,   தெலங்கானா மாநிலம், ராட்ச கொண்டா காவல் துறை ஆணையாளர் மகேஷ் பகவத்திற்கு இதே கோரிக்கையுடன் பல விண்ணப்பம் வந்தது. இதையடுத்து, ஆணையாளர் மகேஷ் பகவத் நேற்று அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில், ‘சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் போலீசார், 2 மாதம் விடுமுறை எடுத்து செல்லலாம். ஆனால், பணியில் உள்ளவர்கள் கட்டாயம் சீருடை, ஷூ அணிய வேண்டும். மேலும் மீசை, தாடி அதிகமாக வளர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என கூறியுள்ளார். இந்த சுற்றறிக்கையால்  மாலை அணிந்து சபரிமலைக்கு செல்ல நினைக்கும் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Sabarimala ,Telangana ,policeman ,state , Telangana, Sabarimala,Action warrant , policeman
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!