×

ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: அமைச்சர் பெயரை கூறி ‘பேஸ் புக்’ காதலியை மிரட்டும் நாகை எஸ்.ஐ

நாகை: திட்டச்சேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்ஐ ஒருவர், இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம்புலத்தை சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். இவர் கடந்த 2017ம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியில் சேர்ந்தார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுபஸ்ரீ சென்னையில் தொண்டு நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. தனிமையில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதில் சுப கர்ப்பமானார். பின்னர் ரவிராஜ் கேட்டுக்கொண்டதால், கர்ப்பத்தை சுப கலைத்தார். தற்போது திருமணம் செய்ய முடியாது என ரவிராஜ் மறுத்து வருகிறாராம். இதுதொடர்பாக தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் சுபஸ்ரீ அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  எங்கள் இருவருக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. எனது செல் நம்பரை கேட்டார். கொடுத்தேன். அதன்பிறகு வீடியோ காலில் பேசிக்கொண்டோம். நேரில் சந்திக்க வேண்டும் என்றார்.

அதன்படி, வைத்தீஸ்வரன்கோயிலில் இருவரும் முதன்முறையாக சந்தித்தோம். பின்னர் காவலர் குடியிருப்புக்கு என்னை அழைத்து சென்றார். உன்னை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக கூறினார். இதை நம்பி நான் என்னையே அவரிடம் இழந்தேன். இப்படி பலமுறை தனிமையில் இருந்ததில் கர்ப்பமானேன். இதை சொல்லி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். அதற்கு அவர் நானும் எனது பெற்றோரிடம் பேசி விட்டேன். திருமணத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. திருமணம் செய்யும் போது கர்ப்பமாக இருந்தால் சரியாக இருக்காது. எனவே கருவை கலைத்து விடு என்றார். மேலும் 3 மாதத்தில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று எனது அம்மாவிடமும் கூறினார். அதை நம்பி நானும் கர்ப்பத்தை கலைத்தேன். ஆனால் அதன்பிறகு அவர் என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இதனிடையே ரவிராஜ் தஞ்சை மாவட்டம் மதுக்கூருக்கு மாறுதலாகி சென்றார். அங்கு சென்று பார்த்தேன். அந்த காவல்நிலையத்தில் இருந்த போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறினேன். அவர்கள் என்னையும், ரவிராஜையும் அழைத்து சமாதானம் பேசினர். அப்போது திருமணத்துக்கு சம்மதித்தார். இந்நிலையில் நான் சென்னை வந்து விட்டேன். சென்னைக்கு வந்து என்னை சந்தித்து, லாட்ஜுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். பின்னர் ஒரு நாள் திருமணம் பற்றி பேசிய போது, ஆத்திரமடைந்தார். திருமணத்துக்கு இப்போது அவசரமில்லை என்று கூறி என்னை அடித்தார். ஆதாரங்களை எல்லாம் நான் அழித்து விட்டேன். நான் போலீஸ்காரன், உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டினார். பின்னர் நான் கோயம்பேடு காவல் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தேன். அந்த மனு தஞ்சை சரக டிஐஜி, நாகை எஸ்பி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே மதுக்கூரில் இருந்து திட்டச்சேரி காவல் நிலையத்துக்கு ரவிராஜ் மாற்றப்பட்டார்.

ஒரு முறை அதிமுகவினர் சிலர் வந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள். ரவிராஜ் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி விடு. அவர் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றனர். அதை நான் ஏற்கவில்லை. இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இதுபற்றி திட்டச்சேரி காவல் நிலைய வட்டாரத்தில் விசாரித்த போது, கடந்த செப்டம்பர் 25ம் தேதியில் இருந்து ரவிராஜ் பணிக்கு வரவில்லை. நெஞ்சுவலி இருப்பதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு சென்று விட்டார். இது தொடர்பாக தஞ்சை சரக டிஐஜி மற்றும் நாகை எஸ்பிக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம் என்றனர்.  தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் விசாரித்த போது, இது தொடர்பாக விசாரித்து ரவிராஜ் தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நாகை எஸ்பிக்கு, டிஐஜி உத்தரவிட்டுள்ளார் என்றனர். நாகை எஸ்பியாக இருந்த ராஜசேகரன் மாற்றப்பட்டு, புதிய எஸ்பியாக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் பொறுப்பேற்கவில்லை. அவர் பொறுப்பேற்ற பிறகு தான் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.

அமைச்சரின் பெயரைசொல்லி மிரட்டல்
எஸ்ஐ ரவிராஜ் பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சாராய வழக்கில் ஒருவரை ரவிராஜ் கைது செய்துள்ளார். பின்னர் அந்த சாராய வியாபாரியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். சாராய வியாபாரியின் மனைவிக்கு, ரவிராஜ் புதிய ஸ்கூட்டி வாங்கி கொடுத்திருப்பதாகவும், இப்போது அவரை அந்த பெண்ணுடன் அவர் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களுடன் கூட்டு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதால் தான் அவர் பல இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு அமைச்சரின் பெயரை சொல்லி உயர் அதிகாரிகளையே மிரட்டுவார் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.


Tags : Nagy SI ,lure minister ,minister , Minister, naming name, base book, threatening girlfriend, Nagai SI
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...