×

திருவில்லிபுத்தூர் அருகே பதுக்கி வைத்திருந்த 10 டிராக்டர் மணல் பறிமுதல்: தாசில்தார் அதிரடி

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பதுக்கி வைத்திருந்த 10 டிராக்டர் மணலை தாசில்தார் அதிரடியாக பறிமுதல் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.  விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் மற்றும் சப்-கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோரின் உத்தரவின்பேரில் திருவில்லிபுத்தூர் பகுதியில் தாசில்தார் கிருஷ்ணவேணி தலைமையில் மற்றும் வருவாய் ஆய்வாளர் பால்துறை குழுவினர் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தாசில்தார் கிருஷ்ணவேணிக்கு மலை அடிவாரப்பகுதியில் மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மணலை பறிமுதல் செய்து  திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். இது குறித்து தாசில்தார் கிருஷ்ணவேணி கூறுகையில்,‘‘மலை அடிவாரப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டிராக்டர் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட மணல் சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது,’’என்றார்.


Tags : Tiruviliputhur ,Thiruvilliputhur , Thiruvilliputhur, hoarding, 10 tractor sand, confiscated, Dasildar Action
× RELATED திருவில்லிபுத்தூரில் சீசன்...