×

கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி: ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும்... நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: முடங்கிக்கிடக்கும் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் புத்துயிர் பெற ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார். தோராயமாக மதிப்பிட்டதில் 1,600 திட்டங்களில் ,கட்டப்பட்டு வந்த 4.58 லட்சம் வீடுகள் பாதியில் முடங்கியுள்ளன. எனவே, பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதன்படி, ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் புத்துயிர் பெற ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ரியல் எஸ்டேட் துறைக்கு  முதற்கட்டமாக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார். மத்திய அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் கோடியும், எஸ்பிஐ மற்றும் எல்ஐசி சார்பில் ரூ.15 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படும். ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.




Tags : Nirmala Sitharaman , 25,000 crore to finance construction projects: Interview with Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...