×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள், அவர்களின் தலைமையில் இந்த கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக-வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று இருக்கிறார்கள்.

இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் மாவட்ட செயலாளர்களாக இருப்பதால் மொத்தமாக இந்த கூட்டமானது நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில்  வெற்றிபெற்றது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி கூறி அதிமுக சார்பில் ஒரு தீர்மானமும், அதனை தொடர்ந்து உள்ளாட்சித்தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாத சூழ்நிலையில் நடக்கின்ற நவம்பர் மாதத்திற்குள் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்னும் 15 நாட்களில் தேர்தல் அறிவிப்புக்கள் வெளியாகும் என மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்தார். எனவே அது தொடர்பாக தேர்தல் பணி செய்வதற்காக அனைவரும் இதே ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுரைகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூறுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. முக்கியமாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று இருக்கிறார்கள்.


Tags : MPs ,headquarters ,AIADMK ,government ,Chennai , MPs , MLAs , AIADMK headquarters , Chennai , discuss , local government polls
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...